Wednesday, October 17, 2012

பொருளாதார வளங்கள்

பொருளாதார  வளங்கள்னு நாம சொல்றது,
   1. நிலம் 
          2. உழைப்பு 
            3.மூலதனம்
         4.முயற்சி 
                                                                                  இந்த நாலையும்  தான்.

01. நிலம் 

இங்க நிலம்னு சொல்லப்படுறது வெறும் தரையை மட்டும் இல்லை. ஒரு உற்பத்தி செயல்பாட்டுக்கு உபயோகமா இருக்கற எல்லா  " இயற்கை  வளங்களையும்" தான். ஏதாச்சும் பொருளையோ இல்லேனா ஒரு சேவையையோ வழங்குறதுக்காக  பயன்படுத்துற தரை, தண்ணீர், சூரிய ஒளி, காத்து இப்பிடி எல்லாத்தையும் தான்.

Micro Economics மற்றும் Macro economics.

பொருளியல நாம பொதுவா ரெண்டு வகையா பார்க்கலாம்.  முதலாவது 
           சிற்றினப் பொருளியல் / நுண்பாக பொருளியல் .  அதாவது    micro  economics 
 மற்றது 
            பேரினப் பொருளியல். அதாவது  macro economics .

micro  economicsங்குறது  ஒரு பொருளாதாரத்துல இருக்கற சின்ன சின்ன பகுதிகள பத்தி நுணுக்கமா ஆராயறது. 
 உதாரணமா ஒரு நாட்டுல உள்ள  ஆரஞ்சு பயிர்ச்செய்கை பத்தின விபரம். இல்லேனா ஒரு நாட்டுல உள்ள மொத்த நுகர்வோர்கள் (consumers ) பத்தின விபரம்.

இதுவே macro economics ங்குறது  ஒரு பொருளாதாரத்த பத்தின  முழுமையான ஆய்வுனு சொல்லலாம். 
உதாரணமா, ஒரு நாட்டோட மொத்த உற்பத்தி, மொத்த செலவுகள கணிக்கிறதை  சொல்லலாம்.   

Wednesday, July 25, 2012

பொருளியல் என்பது என்ன?

   உண்மையில் பொருளியல் என்பது என்ன? பொருளியல் என்பது  இருந்து வந்தது? எனும் கேள்வியை எழுப்பினால், பல்வேறு அறிஞர்கள்      பல்வேறு கருத்துகளை கூறியிருந்தாலும் ஒரு வார்த்தையில் கிடைக்கிற பதில்     "சுயநலம் " என்பதாக இருக்கும்.

  • ஒரு தனிப்பட்ட மனிதன்  எப்படி   உழைத்து , எப்படி  எப்படி சேமித்து சிக்கனமாக வாழலாம் என்பதை யோசிக்கிறான்.
  • ஒரு  நாட்டின் அரசாங்கம், தன நாட்டுக்கு எப்படி   வருமானத்தை பெற்று, எப்படியெல்லாம் முதலிட்டு  நடத்துவது என யோசிக்கும்.
இது ஒவ்வொன்றிலும் ஒருவகை  சுயநலத்  தன்மை ஒளிந்திருப்பது விளங்கும். பொருளியல் கற்கையில் பொருளாதார மனிதன்  என்பவன், சுயநலனை உயர்த்தக்கூடியவாறு தீர்மானங்களை தீர்மானங்களை எடுத்து செயற்படுத்துபவனைதான்.

 தான்  எந்த ஒரு செலவையும்  அந்த செலவினால் கிடைக்கும் பயனுடன் ஒப்பிட்டுப் பார்த்து தீர்மானம் எடுப்பவன் தான் பொருளாதார மனிதன்.
நாம் எல்லோருமே    இப்படித்தான் நடந்து கொள்கிறோம். எனவே நாம் ஒவ்வொருவருமே பொருளாதார மனிதர்கள் தான்.

நாம் செய்யும் ஒரு செலவு, அந்த செலவினால் நாம் பெறப்போகும் பயனைவிட அதிகமாக இருந்தால் நாம் செய்வோமா? நிச்சயமாக மாட்டோம்.

  ஒன்று, செலவேதும் செய்யாமல் நன்மையை பார்ப்போம். அல்லது  செலவில் கூடிய நன்மை அடையப்  பார்ப்போம். அப்படியும் இல்லை என்றால் நாம் செய்யும் செலவுக்கு  நன்மையை பெறப்  பார்போம்.
  மாதிரி யோசிப்பதை நாம்  "பொருளாதார  ரீதியாக சிந்தித்தல்"  என்று சொல்வோம்.

இதை  கீழே உள்ள  வீடியோ மூலமாக  தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு பைசா செலவு செய்யாமல் உச்ச பயனை அடைய ஆர்யாவின் முயற்சி , ஒரு பொருளாதரமான சிந்தனை ஆகும்.